திருச்செந்தூர் - தைப்பூசம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஜனவரி, 2026

திருச்செந்தூர் - தைப்பூசம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்.

தூத்துக்குடியில் திருச்செந்தூர் கோவில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் முத்தையாபுரம் போலீசார் வழங்கினார். 

ஜன.31- தூத்துக்குடி- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் தைப்பூசத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இரவு நேரங்களில் கவனமாக செல்ல ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் ஜனவரி 31ஆம் தேதி அன்று மாலை திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தன சேகர் மற்றும் முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் வடிவேல் மற்றும் போலீசார் விநியோகித்து, பக்தர்களுக்கு பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தினர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad