கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே உள்ள தோட்டவாரம் - கடையால் செங்குழிக்கரை பகுதியில், கோதையாற்றில் மீண்டும் முதலை தென்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக நேற்று அதே பகுதியில் முதலை நடமாட்டம் இருந்துள்ளது. அந்த வழியாகச் சென்ற சிறுவர்கள், ஆற்றில் முதலை இருப்பதைக்கண்டு தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
அடிக்கடி முதலை தென்படுவதால், ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் மற்றும் குளிக்கச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக