ஜோலார்பேட்டை உதவி காவல் ஆய்வா ளர் அலட்சிய பேச்சு மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் கொடுத்த பெண்
ஜோலார்பேட்டை உதவி காவல் ஆய் வாளர் அலட்சிய பேச்சு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்த பெண் திருட்டுப் போன நகையை மீட்டுத் தரக் கேட்ட பெண்ணிடம் என் பாக்கெட்டி லிருந்து எடுத்துக் கொடுக்கட்டுமா ஜோ லார்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் அலட்சிய பேச்சு மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பாய்ச்சல் ஊராட்சி லட்சுமி நகரில் வசித்து வரும் ரெஜினா மேரி (கணவர் – அருள்தாஸ்) என்பவரின் வீட்டில் இருந்து 4 சவரன் தங்க நகை திருடு போனதாக, கடந்த 09.12.2025 அன்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.இதனிடையே, ரெஜினா மேரி தமது 9-ஆம் வகுப்பு பயிலும் மகள் மோனிஷாவிடம் நகை திருடு குறித்து விசாரித்தபோது, எதிர்வீட்டில் வசித்து வரும் கவிதா என்பவரின் மகன் ஸ்ரீகாந்த், தங்களது குடும்பத்தில் நாத்தனார் கண வர் கணேசன் நெஞ் சுவலி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள் ளதாக கூறி,“வீட்டில் உள்ள சங்கிலியை தற் காலிகமாக கொடுத்தால், 10 நாட்க ளில் மீட்டு திருப்பிக் கொடுக்கிறேன். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என கூறி அந்த நகையை பெற்றுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.இந்த உண்மை தெரிய வந்ததும், ரெஜினா மேரி மீண்டும் ஜோ லார்பேட்டை காவல் நிலையம் சென்று, சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி யான உதவி காவல் ஆய்வாளர் பால முருகன் அவர்களிடம் தகவல் தெரிவித் ததாக கூறப்படுகிறது அப்போது,9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தவறுதலாக தேதியை மாற்றி கூறியதை முன்வைத்து,
“அந்த நாளில் நாங்கள் ஊரில் இல்லை, நகையை எடுக்கவில்லை” என குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது
இதனை விசாரித்த உதவி காவல் ஆய்வா ளர் பாலமுருகன், அவர்கள் ஊரில் இல் லை யெனில் நான் எப்படி விசாரிப்பது?” என அலட்சியமாக பதிலளித்ததுடன் என் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கவா? உங்கள் மகளை ஓமில் அனுப்பி விடுவேன் என அவமதிக்கும் வகையில் பேசியதாக ரெஜினா மேரி குற்றம்சாட்டியுள்ளார் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித் தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் வேத னையுடன் தெரிவித்தார். இதனால், இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க எங்களு டைய திருட்டுப் போன நகையை மீட்டுத் தர வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரெஜினா மேரி பொது மக்கள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக