வெள்ளிமலை முருகன் கோவிலில் சுகாதாரக் குறைபாடு.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை பேரூராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பின்புற பகுதியில் சுகாதாரமற்ற முறையில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் கோவிலின் புனிதத்தன்மையும் சுற்றுப்புறச் சுகாதாரமும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் தேங்கி கிடப்பது கவலை அளிப்பதாகவும், உடனடியாக அவற்றை அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, வெள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தேவசம்போர்டு நிர்வாகம் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக