ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களு க்கு பட்டி மன்றம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜனவரி, 2026

ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களு க்கு பட்டி மன்றம் !

ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களு க்கு பட்டி மன்றம் !
திருப்பத்தூர் , ஜன 13 -

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எதற்காக படிக்க வேண்டும் என்ற தலைப் பில் சிறந்த பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தன் பேச்சின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றி னார். மாணவர்களின் பல்வேறு கேள்வி களுக்கு விளக்கம் அளித்தார். இந்த விழாவினை யுனிவர்சல் பள்ளியின் நிறு வனர் சிவப்பிரகாசம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். பள்ளியின் தாளாளர் தீபா சிவப்பிரகாசம் அவர்கள் முன்னிலை வகித்தார். 
இந்த விழாவில்  ஜோலார் பேட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் அழகிரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.வரவேற்புரை பள்ளியின் முதல்வர் கிரிநாத் வழங்கினார். நன்றி யுரை துணை முதல்வர் திருமலை வழங்கினார். ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பெற் றோர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சிறப்பு விருந்தினர் தெளிவான விளக்கம் அளித்தார். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என 2000 நபர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad