சமத்துவ பொங்கல் விழா முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறை சார்பாக தலைக்கவசம் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் !
வேலூர் ,ஜன 13 -
வேலூர் மாவட்டம் இன்று 13.01.2026-ம் தேதி அடுக்கம்பாறை அடுத்த சாத்து மதுரை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர். வே. இரா. சுப்புலெட்சுமி, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன், ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத் தும் குறித்தும், இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாய தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சாலையில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளு க்கு இலவசமாக 120 தலைக்கவசத்தை வழங்கினார் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக