வேலூர் மாவட்டம், குடியாத்தம் காக்கா தோப்பு அத்தி கல்விக் குழுமத்தின் சார் பாக பொங்கல் விழா கொண்டாட்டம்!
குடியாத்தம் , ஜன 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராகமுன்னாள் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர ராஜன் அவர்கள் கலந்து கொண்டு விவசாயம் போற்றும் விதமாகவும் , அனைவரும் படிப்பில் சிறந்து விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார் மேலும் பாரம்பரிய முறையில் நடை பெற்ற கலை நிகழ்ச்சி ,பரத நாட்டியம் மற்றும் சிலம்பாட்டம் கண்டு மகிழ்ந்தார் நிகழ்ச்சிக்கு அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரக வியல் நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி 2026 ஆம் ஆண்டு பொங்கல் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
அத்தி குழுமத்தின் நிர்வாக அறங்காவ லர் டாக்டர் சுகநாதன் அவர்கள் முன்னி லை வகித்தார் அத்தி மருத்துவமனை யின் கிளை மருத்துவர் டாக்டர் கென்னடி அத்தி இயற்கை மற்றும் யோகாமருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி, அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால் ராஜ் சீனித்துரை மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமரவேல் மற்றும் குழந்தை நல மூத்த மருத்துவர் டாக்டர் ஹேமாலதா ஆகியோர் உடன் இருந்தன
நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் JKN பழனி மற்றும் சங்க உறுப் பினர்கள் மற்றும் ஜெயின் சங்கத்தின் உறுப்பினர்கள் , பேராசிரியர்கள் , மருத்துவர்கள் மற்றும் அத்தி இயற்கை மருத்துவ மாணவ மாணவியர்கள் , பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்
பொங்கல் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக