தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி பொங்கல் விழா – தீர்மானங்கள் நிறைவேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 ஜனவரி, 2026

தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி பொங்கல் விழா – தீர்மானங்கள் நிறைவேற்றம்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அழகுநாச்சியம்மன் திருமண மண்டபத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் உழவர் தின கொடியேற்று விழா நடைபெற்றது.


உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற

பொங்கல் விழாவிற்கு

செல்லமுத்து தலைமை வகித்தார்


பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி தலைவர்- 

நாகராஜ்,தாராபுரம் பாரதிய ஜனதா கட்சி. வழக்கறிஞர் எஸ்.கே. கார்வேந்தன். முன்னிலை வகித்தனர்..


இந்த விழாவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில். 


கறிக்கோழி பண்ணை உரிமையாளருக்கு கிலோ ஒன்றிற்கு ஆறு ரூபாய் தரும்  கோழி பண்ணை நிறுவனங்களுக்கு 20 ரூபாய் கேட்டு கோழி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஈசனை கைது செய்ததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார்.

அதன் பிறகு


.உற்பத்தி நிறுவனங்கள் உரத்துடன் இணை உரங்களை கட்டாயப்படுத்துவதை தடுத்து, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மட்டும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சின்ன வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகும் மாவட்டங்களில் விவசாயிகள் நஷ்டமடையாமல் இருக்க, நிரந்தர வெளிநாட்டு ஏற்றுமதி அனுமதி வழங்க வேண்டும்.


அமராவதி பாசன பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்திற்கு குவிண்டால் ரூ.4000 விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.


காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான சேமிப்பகங்கள் அமைத்து, இடைத்தரகர்கள் இன்றி நேர்மையான கொள்முதல் நடைபெற வேண்டும்.


அமராவதி அணையிலிருந்து வீணாகும் உபரி நீரை உப்பாறு அணைக்கு கொண்டு செல்ல சிறப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும்.


தக்காளி, மிளகாய் பயிர்களை தாக்கும் வைரஸ் நோய் குறித்து தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காங்கேயம் வனச்சரக அலுவலகத்தை தாராபுரத்தில் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்


தட்கல் விரைவு மின் இணைப்புக்கு கட்டணம் செலுத்திய விவசாயிகளுக்கு வரிசைப்படி மின் இணைப்பு வழங்க வேண்டும்.


இந்த தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad