ஏரல் சேர்மன் அருணாசல சாமி கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற கோவிலாகும்.
இந்தக் கோவிலில் தை அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கோவில் வளாகத் தில் கொடியேற்ற நிகழ்ச்சியு டன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சாமி விசேஷ அலங் காரங்களுடன் சப்பரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லிப்பார்.
விழாவின் சிகர நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1.30 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம் அபிஷேகம், மாலை 6மணிக்கு விலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலக் காட்சி, இரவு 10 மணிக்கு சுற்பக பொன் சப்ரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
மறுநாள் காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி மூலஸ் கரவுயம் தானம் சேரும் ஆனந்தகாட்சி பெறும்.
வருகிற 20-ந் தேதி காலை தாமிரபரணி ஆறில் சகல நோய் தீர்க்க திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு ஆலிலைச் சயனம் மங்கள தரிசனம் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக