மார்கழி ஆருத்ரா தரிசனம்: பழமை வாய் ந்த மடவாளம் ஸ்ரீ அங்கநாதர்ஆலயத்தில் ஆனந்த நடராஜருக்கு கோலாகல பூஜை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 ஜனவரி, 2026

மார்கழி ஆருத்ரா தரிசனம்: பழமை வாய் ந்த மடவாளம் ஸ்ரீ அங்கநாதர்ஆலயத்தில் ஆனந்த நடராஜருக்கு கோலாகல பூஜை!

மார்கழி ஆருத்ரா தரிசனம்: பழமை வாய் ந்த மடவாளம் ஸ்ரீ அங்கநாதர்ஆலயத்தில் ஆனந்த நடராஜருக்கு கோலாகல பூஜை!
திருப்பத்தூர் , ஜன 3 -

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் பழமையும் புகழும் பெற்ற நலம் பெரு ஸ்ரீ அங்கநாதர் ஈஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவ காமி சுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் விமரி சையாக நடைபெற்றன ஆருத்ரா தரி சனத்தை முன்னிட்டு, அதிகாலை விடியற் காலை 3 மணி அளவில் யாக பூஜைகள் மற்றும் யாக விஜயம் நடைபெற்றது. தொடர்ந்து 4 மணி அளவில் நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்மையாருக் கும் வாசனை திரவங்கள், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட திரவங்களால் சிறப்பான அபிஷேகங்கள் செய்யப் பட்டது அதனைத் தொடர்ந்து, காலை 6 மணி அளவில் சிவகாமி சுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு மலரால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தீப ஆராத னை மற்றும் பல்வேறு தீப ஆராதனைகள் நடைபெற்றது. இந்த புனித நிகழ்வின் போது, ஆலயம் முழுவதும் அரோகரா அரோகரா என்ற பக்தர்களின் முழக்கத் தால் அதிர்ந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து ஆன்மீக மகிழ்ச்சியில் திளைத்தனர்.ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிர சாதம், மை பிரசாதம் மற்றும் ஆருத்ரா பிரசாதம் வழங்கப்பட்டது. மார்கழி மாதத்தில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும் இந்த ஆருத்ரா தரிசனம் மிகுந்த புண்ணிய பலனை தரும் என நம்பப்படுவதால், சுற்றுவட்டார கிராமங் களைச் 500 மேற்பட்ட  பக்தர்கள் பெரு மளவில் கலந்து கொண்டனர்.இந்த விழாவானது, பக்தர்களின் மனங்களில் ஆன்மீக உற்சாகத்தையும், இறைநம்பிக் கையையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad