தூத்துக்குடியில் வாகனம் விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் வாகனம் விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம்.

தூத்துக்குடியில் வாகனம் விபத்தில் பள்ளி மாணவன் பலி.

ஜன.29- தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த அப்துல்காதர் மகன் அகமது ஆபித் இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இன்று காலை அகமதுஆபித், அவரது நண்பர் அஷ்ரப் இருவரும் இருசக்கர வாகனத்தில் மில்லர்புரத்திற்கு டியூசனுக்கு சென்றுள்ளார். 

பின்னர் பக்கீல் ஓடை ரோடு வழியாக வந்து கொண்டிருந்தபோது சாலையில் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த அகமத் ஆபித் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த தென்பாகம் காவல்துறை ஆய்வாளர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad