தென்னம்பாளையத்தில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் 55 வது வார்டு முத்தையன் கோவில் நகர் பகுதி பாலத்தில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் திமுக தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் அவர்களிடம் நேரடியாக புகார் செய்தனர் இதை எடுத்து எம்எல்ஏ செல்வராஜ் அவர்கள் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த முத்தையன் கோவில் நகர் பகுதிக்கு சென்றார் அங்கு குவிந்துள்ள குப்பைகளை கண்டு மிகவும் கோபமடைந்து திடீரென குப்பைகளை மாநகராட்சி அகற்றினால் தான் நான் இங்கிருந்து செல்வேன் என்று ரோட்டில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார் உடன் திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி கே டி மு நாகராசன் உடன் இருந்தார் மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து மாநகராட்சி துணை ஆணையாளர் மகேஸ்வரி சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கே வி ஆர் நகர் சரக காவல்துறை உதவி கமிஷனர் ஜான் உள்ளிட்டோர் செல்வராஜ் எம்எல்ஏ அவர்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் குப்பைகளை அகற்றினால் தான் இங்கிருந்து செல்வேன் இல்லையென்றால் இங்கே தான் இருப்பேன் என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டார் இதை அடுத்து சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் ஒரு வாரமாக தான் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு
அள்ளபடாமல் உள்ளது என்று தெரிவித்தார் இதனால் கோபம் அடைந்த எம்எல்ஏ சுகாதார அலுவலர் கையைப் பிடித்து குப்பை குவியலுக்குள் இழுத்துச் சென்றார் மலை போல் இந்த குப்பை ஒரு வாரமாக குவித்துள்ள குப்பைகளா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார் இதனால் இந்த பகுதி மிகவும் பரபரப்பானது இதை அடுத்து மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இதுகுறித்து செல்வராஜ் எம்எல்ஏ கூறுகையில் மாநகராட்சி நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பலமுறை குப்பைகளை அகற்ற கூறியுள்ளேன் தொடர்ந்து இந்த பிரச்சனை இன்றும் தீரும் நாளை தீரும் என காத்திருந்தோம் குப்பைகள் அகற்றப்படவில்லை மாதக்கணக்கில் ஒரே இடத்தில் குப்பை தேங்குவதால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது குப்பை பிரச்சனையை இயக்கமாக பார்க்காமல் சட்டமன்ற உறுப்பினராக பார்க்கிறேன் மாநகராட்சி ஆணையாளரிடம் குப்பை கொட்டுவது பற்றி பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது அதை அவர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக