நாகர்கோவில் - நெய்யாட்டின்கரை பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

நாகர்கோவில் - நெய்யாட்டின்கரை பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

நாகர்கோவில் ரூட்–2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
நெய்யாட்டின்கரை அருகே கோர விபத்து – 50க்கும் மேற்பட்டோர் காயம்

இன்று காலை, கேரள மாநில அரசுப் பேருந்துகள் இரண்டு நெய்யாட்டின்கரையில் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. 

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் சென்ற பேருந்தும், நெய்யாட்டின்கரையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற பேருந்தும் எதிரெதிராக மோதியதாக தகவல்.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனை (GH) மற்றும் நிம்ஸ் (NIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 

விபத்து காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad