ஜன.17- தூத்துக்குடி மாவட்டம், ஓட்டநத்தம், மணியாச்சியை சேர்ந்த சிவா மகன் கலைச்செல்வம் (25) மற்றும் அமுதாநகர் தூத்துக்குடி சேர்ந்த ராஜன் மகள் முத்து செல்வி( 21) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரவுண்டானா சர்வீஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது துறைமுகத்திலிருந்து உரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கலைச்செல்வம் மற்றும் முத்து செல்வி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து தகவலறிந்த தெர்மல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக