தூத்துக்குடி மாவட்டம், மூக்குபேரி- ஞானராஜ் நகர் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் 109 வது பிறந்தநாள் விழா.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆழ்வார் திருநகரி ஒன்றியம் சார்பாக மூக்குப்பேரி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட ஞானராஜ் நகர் காமராஜர் தெருவில் கிளைச்செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஆழ்வார் திருநகரி ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் பாலசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் கிளைக் கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தார்கள். விழா முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக