தாராபுரத்தில் சமத்துப் பொங்கல் விழா – ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை ஏற்பாடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 ஜனவரி, 2026

தாராபுரத்தில் சமத்துப் பொங்கல் விழா – ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை ஏற்பாடு


தாராபுரம் அரசு மருத்துவமனை எதிரில், ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பில் சமத்துப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அறக்கட்டளை தலைவர் அபுதாகிர் தலைமையேற்றார்.

நிகழ்வின் தொடக்கத்தில் செயலாளர் க. சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் மனித நேயம் குறித்து பலர் உரையாற்றினர்.

விழாவில் சமூக ஆர்வலர்கள் டாக்டர் ஜெய்லானி, டாக்டர் கவி சிவசங்கர், தமிழ் புலிகள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஒண்டிவீரன், சிபிஐ தாலுகா செயலாளர் கனகராஜ், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் பங்க் மகேஷ் குமார்,சமூக ஆர்வலர் நாத்திக சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திருமா ரகு, முத்தரசு, சாகுல் ஹமீது, நாட்டு துரை சமூக ஆர்வலர் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வருகை தந்த பொதுமக்கள் மற்றும் பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதன் மூலம் சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக விழா கொண்டாடப்பட்டது.

மேலும், இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துப் பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். விழாவின் இறுதியில் முருகன் நன்றி உரையாற்றினார்.



திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர் சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad