தமிழ்நாடு சத்துணவு அங்கன் வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடை பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தும் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜனவரி, 2026

தமிழ்நாடு சத்துணவு அங்கன் வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடை பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தும் !

தமிழ்நாடு சத்துணவு அங்கன் வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடை பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தும் !
திருப்பத்தூர் , ஜன 7 

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் எங்களுடைய ஓட்டு எவ்வளவு இருக்கு துன்னு நீங்க தெரிஞ்சுக்கோங்க! நாங்க இங்க 20% தான் வந்து இருக்கோம்! எங்க ஓட்டு வேணாமா? தேர்தல் வாக்குறுதி யை  நிறைவேற்று என தமிழக அரசுக்கு எச்சரிக்கை! கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்களால் பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சுமார்  1000க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்  முக்கிய கோரிக்கைகள் 
தேர்தல் வாக்குறுதி படி வருவாய் கிராம உதவியாளர்களுக்கு உள்ளது போல் சிறப்பு பென்ஷன் தொகை 6750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும்,
சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலைக்கு 19500 மற்றும் சமையல் உதவியாளருக்கு 15700, அடிப்படையில் காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும்,
அரசு காலி பணியிடங்களை நிரப்பும் போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதி உள்ள சத்துணவு அங்கன்வாடி பணி யாளர்களை ஐம்பது விழுக்காடு அடிப் படையில் ஈர்த்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு  பெண் கள் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் அப்போது நாங்க தற்போது இந்த ஆர்ப்பாட்டத் திற்கு  20% மட்டும் தான் இங்க வந்திருக் கோம், முழுசா வந்தா தாங்காது, இப்பயா வது எங்க ஓட்டு எவ்வளவு இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க, எங்க ஓட்டு உங்க ளுக்கு வேண்டாமா? தேர்தல் வாக்குறுதி யை உடனடியாக நிறைவேற்று என கோஷங்கள் எழுப்பி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது…


செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad