உடல் நலக்குறைவால் உயிர் இழந்த வரின் உடல் உறுப்புகள் தானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

உடல் நலக்குறைவால் உயிர் இழந்த வரின் உடல் உறுப்புகள் தானம் !

உடல் நலக்குறைவால் உயிர் இழந்த வரின் உடல் உறுப்புகள் தானம் !
குடியாத்தம் , ஜன 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் காமாட்சியம்மன் பேட்டை ஓய்வு பெற்ற நகராட்சி பொறியாளரும், குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கே.சி. சொக்கலிங்கம் அவர்களின் சகோ தரருமான கே.சி.தனபால்(வயது85 ) இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரின் மகன் ராஜேஷ் மற்றும் குடும்பத்தார் ஒப்புதலுடன் அவரின் கண்கள் வேலூர் டாக்டர் அகர் வால் கண் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது இதற்கான முதல் தகவ லை குடியாத்தம் லயன்ஸ் சங்க முன் னாள் செயலர் சுரேஷ் அளித்தார். லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் துரை செல்வம், பாபு, கருணாகரன் ஆகியோர் உடனிருந்து உதவினர். அன்னாரின் உடல்தானத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கண் உடல்தான ஏற்பாடுகளை குடியாத்தம் ரோட்டரி சங்க கண்-உடல் தானக்குழு தலைவர் எம்.ஆர்.மணி  ஏற்பாடு செய்யப்பட்டு உடன் இருந்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad