பலூன் கடையில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து வெங்காயவேலூர் கிராமத்தை சேர்ந்த பெண் பலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜனவரி, 2026

பலூன் கடையில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து வெங்காயவேலூர் கிராமத்தை சேர்ந்த பெண் பலி !

 பலூன்  கடையில்   திடீரென   கேஸ் சிலிண்டர் வெடித்து வெங்காயவேலூர் கிராமத்தை சேர்ந்த பெண் பலி !
திருவண்ணாமலை , ஜன- 20

திருவண்ணாமலை மாவட்டம் வெங்காய வேலூர் கிராமத்தை சேர்ந்த பெண் பலி.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் விழாக்களில் தீா்த்தவாரி பிரசித்தி பெற்றது. ஆண்டு க்கு 3 முறை 3 ஆறுகளிலும், 3 முறை கோயில் அருகேயுள்ள குளங்களிலும் தீா்த்தவாரி நடைபெறும். அதன்படி, தை மாதம் 5-ஆம் நாளான திங்கள்கிழமை தென்பெண்ணையாற்றில் தீா்த்தவாரி  நடைபெற்றது.இந்நிலையில் திருவண் ணாமலை இருந்து ஜனவரி 19 ஆம் தேதி காலை புறப்பட்ட அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் பிற்பகலில் மணலூர்பேட்டை சென்றடைந்தார். திருக் கோவிலூர், மணலூர்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 30 திற்கும் மேற்பட்ட சுவாமிகள் ஆற்று திரு விழாவில் கலந்து கொண்டன. மாலை 5 மணி அளவில் தீர்த்தவாரி முடிந்து பொது மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்படும் நிலையில், ஆற்று பகுதியில் உள்ள தற்காலிக பலூன் கடையில் திடீ ரென பலூன் நிரப்பப்படும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளா னது.இந்த விபத்தில் வெங்காயவேலூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவன் என்பவ ரின் மனைவி கலா என்ற பெண்  நிகழ்வி டத்திலியே உயிரிழந்தார். அதோடு 18 பேர் பலத்த காயங்களுடன் திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கலா மட்டுமின்றி கூடுதலாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அளித்த பேட்டியில், மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் பலூன் நிரப்புவதற்கு பயன் படுத்தப்படுகிறது. அந்த கேஸ் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் 13 நபர்கள்  தற்போது வரை திருவண்ணாமலை மருத்துவ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கலா எனும் பெண் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இது போன்ற சிலிண்டர்களு க்கு உரிமம் உள்ளதா என்று தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணைக்கு பின்னரே அது குறித்து தெரியவரும் என்றார். எதிர்வரும் ஆற்று திருவிழாவில் இது போன்ற விபத்து ஏற்படுத்தக்கூடிய சிலிண்டர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு விசாரணைக்கு பின்னரே தெரிவிக்கப் படும் என்று கூறினார். ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் 18 பேர் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுதொடர்பாக திருவிழாவின்போது மனிதஉயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பலூன் கடை உரிமையா ளரான திருவண்ணாமலை மாவட்டம் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் 
T.R.கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad