தினசரி மார்க்கெட்டில் நகராட்சி நிர் வாகம் நிர்ணயம் செய்த சுங்க கட்டணம் பெயர் பலகை வைக்கக் விவசாயிகள் கோரிக்கை !
குடியாத்தம் ,ஜன 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீருவு நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வரு வாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னி லை வகித்தார் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார் இதில் குடியாத்தம் . பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள விவசா யிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
பேரணாம்பட்டு பகுதியில் சாலைகளில் மாடுகளை விட்டு விடுவதால் போக்கு வரத்திற்கு பெரிதும் இடையூராக உள்ளது
இவைகளை நகராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் தரணம் பேட்டை தினசரி மார்க்கெட்டில் சுங்கம் வசூல் செய்வதில் பல்வேறு முறை கேடு கள் நடைபெறுகிறது இதில் நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள கட்டண த்தின் . பெயர் பலகையை வைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் எம் சேகர் கே சாமிநாதன். துரை செல்வம் பழனிவேல் உள்ளிட்ட விவசாய பிரதி நிதிகள் கலந்து கொண்டனர் இதில் திருமணியை சேர்ந்த விவசாயி ஆறு முகம் என்பவர் லத்தேரியில் உள்ள உரக் கடையில் உரம் வாங்கிய போது அதில் மண் கலந்திருப்பதாக மண் ஆதாரத்து டன் காட்டினார் இதனால் சற்று பரபரப்பு காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக