தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ. 1,00,000/- வழங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர் !
வேலூர் , பிப் 2 -
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், அரியூர் மதுரா ஆவாரம் பாளையம் பகுதி யை சார்ந்த செல்வன் ஹனிஷ் பாம்பு கடித்து உயிரிழந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1,00,000 நிதியுதவிக் கான ஆணையினைஅவரின் குடும்பத்தாரிடம் மாவட்ட ஆட்சித் தலை வர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.02.2026) வழங்கி னார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணி யன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக