காயிதே மில்லத் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறைதீவு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
வேலூர் , பிப் 2 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (02.02.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என்.மதுசெழியன், வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக