பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி வாட்ச் கண்ணாடி வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 பிப்ரவரி, 2026

பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி வாட்ச் கண்ணாடி வழங்கல் !

பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி வாட்ச்  கண்ணாடி வழங்கல் !
வேலூர் , பிப் 2 -
          வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங் கள் வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம், தேவராஜ் நகரை சார்ந்த நூர் (வயது 45)என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.2420/- மதிப்பிலான பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக் கான பிரெய்லி வாட்ச், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சி ஆகிய நலத்திட்ட உதவிகளை இன்று (02.02.2026) ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை நல அலுவலர் பாபு, வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad