குடியாத்தம் ரூ.1.52 கோடி புதிய அரசினர் உயர்நிலைப்பள்ளி கட்டிடம் முதல்வர் காணொளி வாயிலாக திறப்பு !
குடியாத்தம் ,பிப் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் காளியம்மன் பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி ரூபாய் 1.52 கோடி மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் அறிவியல் ஆய்வகம் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள் மின் பணிகள் கொண்ட கட்டடம் தமிழ் நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலை மை ஆசிரியர் சிவகாமி சுந்தரி தலைமை தாங்கினார் நிகழ்ச்சி யில் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கொண்ட சமுத்திரம் ஊரா ட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் குத்து விளக்கு ஏற்றி இனிப் புகள் வழங்கினர் அப்போது வார்டு உறுப்பினர்கள் சுடர் கொடி. சிவகவி தமிழ்ச்செல்வி சரவணன் உமேஷ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ - மாணவி கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக