திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 பிப்ரவரி, 2026

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு !

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்  வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு !
திருவண்ணாமலை , பிப் 24 -

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று வாக்காளர் இறுதிப்பட்டியில் வெளியயீடு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் 2025, நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 14-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, டிசம்பா் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.இதைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான உரிய படிவங் கள் வாக்காளா்களிடமிருந்து பெறப்பட் டன. 2026, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி யேற்பு நாளாகக் கருத்தில் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்களிடம் இருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மனுக்கள் பெறப்பட்டன.இதைத் தொடா் ந்து புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதுபோல நிரந்தர இடமாற்றம், இறப்பு உள்ளிட்ட காரணங்க ளுக்காக பெயா்கள் நீக்கப்பட்டன.இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வாக்காளா்இறுதிப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலரு மான க.தா்ப்பகராஜ் வெளியிட்டாா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத் திலுள்ள செங்கம் (தனி), திருவண்ணா மலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் மொத்தம் 9,43,727 ஆண் வாக்கா ளா்கள், 9,75,277 பெண் வாக்காளா்கள், 155 மூன்றாம் பாலினத்தவா் என மொத் தமாக 19,19,159 வாக்காளா்கள் இறுதிப் பட்டியலில் உள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் கலையரசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad