திமுக அரசின் சாதனை களை விளக்கி வீடு வீடாக பிரச்சாரம்.
திமுக தலைவர், மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்பி., ஆணைப்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்படி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ஏ.பி.ரமேஷ் ஆலோசனைப்படி மேல திருச்செந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜா தலைமையில்
மேல திருச்செந்தூர் ஊராட்சிக்குட்பட்ட நடு நாலு மூலைக் கிணறு உட்பட்ட 2 வது வார்டில் மகளிரணி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி வெல்லும் தமிழ்ப் பெண்கள் பிரச்சார பரப்புரையை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிளை செயலாளர் தர்மராஜ் , கிளை இளைஞரணி அமைப்பாளர் வசந்த் ,துணை அமைப்பாளர்கள் வசந்தகுமார், மனோ பாண்டியன், செந்தமிழ் ராஜ், அம்பேத்கர், தீயாக சீலன், நாராயணன், ராஜு மற்றும் வார்டு கழக செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மேல திருச்செந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். மகாராஜா தலைமையில் நாராயணன் சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக