பிப்ரவரி 27. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.
இந்த உற்சவம் நம்மாழ்வார் விக்ரம் கிடைத்த மாசி விசாக நட்சத்திரம் முடிய 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. காலை 5 மணக்கு விஸ்வரூபம்.6.30 மணிக்கு திருமஞ்சனம்.7.45 மணிக்கு நித்தியல். 8 மணிக்கு கொடிமரம் முன்னர் நம்மாழ்வார் உற்சவர் எழுந்தருளினார். 8.15 மணிக்கு கொடி பட்டம் மாடவீதி சுற்றி வந்தது. 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
அர்ச்சகர் கண்ணன் கொடியேற்றினார். தினசரி காலை தோளுக்கினியானில் ரதவீதி புறப்பாடும் மாலை 6.30 மணிக்கு பரங்கி நாற்காலி. பூம்பல்லாக்கு. புன்னைமர வாகனம். திருப்புளியடி வாகனம். ஆகியவற்றில் ரதவீதி நடைபெறும். மார்ச் 2 ந்தேதி கருடசேவை. 6 ந்தேதி தேரோட்டம். 7, 8 தேதிகளில் தெப்பம் நடைபெறுகின்றது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் விவேக். சுவாதி. நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். காரிய மாறன் கலைக் காப்பகத்தினர் திருவிழா ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக