அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் 36ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா விஸ்வகர்மா சமூகத்தினரின் 4 ஆம் நாள் உற்சவம் சுவாமி வீதி உலா !
வேலூர் , பிப் 26 -
வேலூர் மாநகரம் பேரிப்பேட்டை அருள் மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் 36ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா விஸ் வகர்மா சமூகத்தினரின் நான்காம் நாள் உற்சவம் இன்று நான்காம் நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. நான்காம் நாள் உற்சவ உபயதாரர்கள் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலை வர் சி.தேஜோமூர்த்தி, துணைத்தலவர் எல்.பன்னீர்செல்வம், ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. பரம்பரை அறங் காவலர் வி.துரைசாமி,ராமு வி.டி.என். மார்கபந்து, வி.சத்தியநாராயணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர் விஸ்வ கர்ம நண்பர்கள் நலச்சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமை நிலைய செயலாளர் சு.சோமாஸ்கந்தன், செயற் குழு உறுப்பினர் தி.சு,சக்ரீஸ்வரன், வே. பஞ்சாட்சரம், கே.ஜி.சண்முகம் ஆச்சாரி, மூர்த்தி, கோ.சுவாமிநாதன், தாமோதரன், செல்வி, முரளிதரன், த.கனகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.காலை கேடைய உற்ச வம் நடைபெற்றது. மாலை நாக வாகனத் தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் வி.என். ஷண்முக குருக்கள், உமாபதி குருக்கள், ஆகியோர் பூஜைகள் செய்தனர். டி.எஸ். கணேசன் குழுவினரின் நாதசுரம் கச்சேரி நடைபெற்றது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக