திருநெல்வேலி மாவட்டம், கீழபிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி(33).கிட்டாச்சி டிரைவரான இவர் நேற்று மலையன்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான கிட்டாச்சியை ஓட்டுவதற்காக வந்துள்ளார்.
கிட்டாச்சி உரிமையாளர் கண்ணன் கொட்டாரத்தில் இருந்து பெரியவிளை செல்லும் சாலை, பெட்ரோல் பங்கிற்கு அருகில் உள்ள இடத்தில் தனக்கு சொந்தமான வாகங்களை நிறுத்துவது வழக்கம்.
அதன் அருகில் உள்ள கட்டத்தில் வேலைக்காக வந்த செல்லபாண்டியை தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கட்டிடத்தின் முன்பு இரத்த காயங்களுடன் செல்லபாண்டி இறந்து கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏடிஎஸ்பி மதியழகன், மற்றும் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியை சுற்றி ஆய்வு செய்தனர். இறந்து கிடந்த செல்ல பாண்டியின் கண்ணத்தில் கம்பிகள் குத்தப்படிருந்தது, அதேபோல் கம்பால் முகத்தில் அடிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்ததும் தெரியவந்தது.
இதனால் செல்லபாண்டி கொலை செய்யபட்டிருக்க வாய்பிருக்கால் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக