வேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 உங்க கனவை சொல்லுங்க கருத்து
கேட்பு கூட்டம் !
வேலூர் , பிப் 6 -
வேலூர் மாவட்டம் தொலை நோக்கு திட்டம் 2030 உங்க கனவ சொல்லுங்க கருத்துக்கேட்புக் கூட்டம் வழியாக உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தின் கீழ் பின்வரும் கருத்துக்களை மாவட் ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி அவர்களி டம் வேலூர் மாநகர மேயர்சுஜாதாஆனந்த குமார் முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் முகமது சகி முன்னிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் காட்பாடி ரெட்கி ராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த் தனன் தெரிவித்த கருத்துக்கள் தெரிவித் தார் அப்போது மாவட்ட பொருளாளர் ஆடிடர் பாண்டின் செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், ருக்ஜிராஜேஸ்குமார், எஸ்.ரமேஷ்குமார் பேராசிரியர் திரு மாறன் ஆகியோர் உடனிருந்தனர் அரசு நகர்புற மற்றும் ஊர்புற சுகாதார நிலை யங்கள் அமைத்து உரிய மருத்துவ வசதி வழங்கி வருகிறது. உள்ளுர் மக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே மருத்துவ வசதியினை இந்த நிலையங்கள் வழங்கி வருகின்றன மேலும் கூடுதலாக வாரத் தில் ஒரு நாள் சிறப்பு மருத்து வர்கள் வருகை தர வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை யை மக்கள் தொகை பெருக்கத்தினை கருத்தில் கொண்டு 2030ல் என்ன மக்கள் தொகை இருக்கும் என கணித்து அதற் கேற்றவாறு கூடுதலாக ஆரம்ப சுகாதார / நகர்புற சுகாதார நிலையங்கள்ஏற்படுத்த திட்டமிடவேண்டும் வேலூர் அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனை அடுக்கம் பாறையில் அமைந்துள்ளது பெருகிவரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு இம் மருத்துவனைக்கு நோயா ளிகள் வந்து செல்ல ஏற்ற வகையில் வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலி ருந்து நகர பேருந்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் குறிப்பாக காட்பாடி, அலமேலு மங்காபுரம், சத்துவாச்சாரி, கொணவட்டம், அரியூர் ஶ்ரீபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து அடுக்கம்பாறை வரை, நகர பேருந்துங் கள் இயக்கப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவர் இதனால் மாந கரில் இரண்டு சக்கர மற்றும் இதர வாகன போக்குவரத்து குறைய வாய்புள் ளது.நகரின் பல சாலைகள் அகலபடுத் தும் பணிக்காக மரங்கள் அகற்றப்பட்டுள் ளன தற்போது சாலையின் இரு மருங்கி லும் புதிய மரக்கன்றுகளை நட்டு பரா மரிக்க திட்டமிட வேண்டும். வேலூர் மாநகருக்குக்கென வாகன போக்கு வரத்து குறைக்கும் வகையில் சுற்று வட்ட பாதை அமைக்க வேண்டும். சென்னை, நெல்லை, மதுரை போன்ற மாநகரங்க ளில் பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக பஸ் டெர்மினஸ் அமைக்கப்பட்டுள்ளது போல் வேலூர் மாநகரிலும் காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம், கொணவட்டம், ஶ்ரீபுரம் உள்ளிட்ட தேவைப்படும் பகுதி களில் பஸ் டெர்மினஸ் அமைத்து போக்கு வரத்தினை எளிமைபடுத்த வேண்டும்.
காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே எப்போதும் உள்ளது நகர பேருந்துகள் ரயில் நிலையத்திற்கு உள் வந்து சென் றால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்காது. காட்பாடியில் நிறுவப்பட்ட அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் செயல்படாமல் உள்ளன அதனை செயல் பட வைக்க வேண்டும். நகர பேருந்து 1 மற்றும் 2 வழித்தடத்திற்கான நேர ஒதுக்கீடு 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதுள்ள மற்றும் இனி ஏற்படும் போக்குவரத்து வாகன நெரிசலை கணக்கில் கொண்டு வழித்தடங்களின் நேரம் திருத்தி நிர்ண யிக்கப்பட வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் இரு சக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்ர வாகனங்களின் எண்ணிக்கை ஆகிய வற்றை கருத்தில் கொண்டு காட்பாடி ரயில்வே மேம்பாலம் விரிவு படுத்தப்பட வேண்டும் அல்லது கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்டப்படவேண்டும்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123/ 9894884876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக