காட்பாடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் !
காட்பாடி , பிப் 6 -
வேலூர் மாவட்டம் காட்பாடி மாநகராட்சி அலுவலகத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் M.A.B.L ., அவர்கள் இன்று (06.022026) காட்பாடியில் உள்ள மாநகராட்சி 1 வது மண்டலம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்பு லெட்சுமி. இ.ஆ.ப. மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார். துணை மேயர் M.சுனில்குமார், மாநகராட்சி ஆணையாளர் பெருங் குழுத் தலைவர் வேல்முருகன்இரா.லெட்சுமணன், 1 வது மண்டலக் குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர்கள் விமலா சீனிவாசன், சித்ரா லோகநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சுப்பிரமணி உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123/9894884876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக