வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ்கமிட்டி சார்பில் பாரதிய ஜனதா அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ்கமிட்டி சார்பில் பாரதிய ஜனதா அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரதிய ஜனதா அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , பிப் 6 -
   வேலூர் மாவட்டம் குடியாத்தம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை அரசியல் காழ்ப் புணர்ச்சியுடன் பெயர் மாற்றம் செய்த பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும், அத்திட்டத்தை பெயர் மாற்றம்செய்யாமல் அதன் அடிப்படை அம்சங்கள் மாறாமல் தொடர்ந்து செயல்படுத்தக் கோரியும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (06.02.2026) வெள்ளிக் கிழமை காலை 10 மணியள வில் குடியாத்தம் புதிய பேருந்து நிலை யம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டமும் அதை தொடர்ந்து குடியாத்தம் கோட்டாட் சியர் வாயிலாக பாரத பிரதமர் அவர் களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும் மனு அளிக்கும் நிகழ்வும் நடை பெற்றது.நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் .தேவகிராணி ராஜேந்திரன், காமராஜ், சேகரன், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்  கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத். நவீன்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர் நிகழ்வில் பாஜக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சா.சங்கர் விஜயகுமார,  தனசேகரன், தாண்டவ மூர்த்தி, ஆரோன், பள்ளிக்கொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா, மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாநில RGPRS துணைத் தலைவர் ராஜசேகரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு ஒருங்கிணைப் பாளர் MD.ராகிப், மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் ஜலேந்திரன், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர் சுப்பிரமணி, மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் காத்தவராயன், பள்ளி கொண்டா பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் பாஷா, மற்றும் நிர்வாகிகள் ரங்கநாதன், சத்தியமூர்த்தி, குபேந்திரன், ஸ்டாலின், உமாபதி, சுதாகரன், இலியாஸ் பாஷா, பன்னீர் செல்வம், மன்சூர், ஜூபேர்கான், கோவிந்தராஜ், விஜய்காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad