தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க. செல்வராஜ் MLA அவர்கள்
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள தனது திருப்பூர் தெற்கு தொகுதி, சுகுமாரன் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்துவரும் 496 குடும்பங்களுக்கு பட்டா கிடைத்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக,
சென்னையில் நில நிர்வாக ஆணையர் உயர்திரு. கஜலட்சுமி I.A.S., அவர்களை நேரில் சந்தித்து பட்டா குறிப்பாணை அறிக்கை அரசுக்கு விரைந்து பரிந்துரைத்து குறிப்பாணை அறிக்கையினை விரைந்து அனுப்பிட கோரிக்கை மனுவினை அளித்தார் அந்த மனுவின் விவரம் வருமாறு திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் திருப்பூர் டவுன் கிராமம் வார்டு ஜி பிளாக் 1 சுகுமாரன் நகர் புதிய எண் 1/1 மற்றும் 1/3 ஆகிய புல எண்களில் 12 -75 ஏக்கர் நொய்யல் ஆறு புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 496 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பராமரிப்பில் உள்ள இடம் மேற்கண்ட நிலத்திற்கும் நொய்யல் ஆற்றிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதால் வாரியத்தின் பெயரில் அரசாணை பெற்று அவர்களுக்கு பட்டா கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் கூட்டு புல தணிக்கை மேற்கொண்டு வாரியத்திற்கு வழங்கலாம் என்ற அறிக்கையினை அரசுக்கு அனுப்பப்பட்டது வாரியத்தின் பெயரில் அரசாணையை பெற வேண்டி உயர்திரு நில நிர்வாக அலுவலர் அவர்களிடம் குறிபானை அறிக்கையினை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளதாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் 12-8-2025 தேதியிட்ட கடிதம் மூலம் தகவல் அளித்துள்ளார்கள் உயர்திரு ஆணையர் அவர்கள் விரைந்து பரிந்துரைத்து பட்டா கிடைத்திட உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் அவர்கள்
திருப்பூர் தெற்கு தொகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருப்பவருக்கு வீட்டு மனை பட்டாக்கள் அரசிடம் இருந்து பெற்று எந்த ஒரு பாரபட்சமில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக