தாராபுரம் பத்திரிக்கையாளர் நல சங்க புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் நியமனம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 பிப்ரவரி, 2026

தாராபுரம் பத்திரிக்கையாளர் நல சங்க புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் நியமனம்.


தாராபுரம் பத்திரிக்கையாளர் நல சங்க புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் நியமனம். மனித வள மேலாண்மை துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் வாழ்த்து.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பத்திரிக்கையாளர் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் எண். கயல்விழி செல்வராஜ் அவர்களை, அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.


இந்த சந்திப்பில், சங்கத்தின் புதிய தலைவராக எஸ். காஜா மைதீன், செயலாளராக கண்ணன், பொருளாளராக ஜாபர் சாதிக், துணைத் தலைவராக தங்கவேல், துணைச் செயலாளர்களாக முனியப்பன், செய்தி தொடர்பாளராக கிருபாகரன், உதவி செய்தி தொடர்பாளராக கவியரசு, மூத்த செய்தியாளராக ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.


மேலும், செயற்குழு உறுப்பினர்களாக ஜாகிர் அப்பாஸ், அன்பழகன், மோகன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, சங்கத்தின் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளதற்கான வாழ்த்துகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.


அப்போது, அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பத்திரிகையாளர்கள் சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஊடகத்துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும், பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளுக்கு அரசு உரிய கவனம் செலுத்தும் எனவும் அவர் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad