400 ஆண்டுகள் பழமையான சீவூர் ஸ்ரீ காளியம்மன் கோவில் தேர் திருவிழா
சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
குடியாத்தம் , பிப் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன்.திரு கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் திருத்தேர் திருவிழா நடைபெறும் இதனிடையே இந்த ஆண்டு இன்று திருத்தேர் திருவிழா வெகு விமர் சையாக நடைபெற்றது. முன்னதாக ஊர் மக்கள் பொங்கலிட்டும் கூல் வார்த்தும் பூகரகம் எடுத்து காளி அம்மனை வழி பட்டனர். மேலும் இன்று காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் சீவூர் கிராமத்தின் முக்கிய வழியாக சென்றது அப்போது வழிநெடுகிலும் ஆடுகள் கோழிகள் பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் நாட்டுப்புற இசை மேளதாளங் களுடன் சிலம்பாட்டம் தப்பாட்டம் மானாட்டம் போன்ற பழமையான கலை களுடன் தேர் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடு களை ஊர் முக்கிய பிரமுகர்கள் இளை ஞர்கள் ஏற்பாடு செய்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக