உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் டி பி பாலசிங் தலைமையில் கட்சியினர் உற்சாகம்.
தமிழக அரசு சார்பில் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ. 3000/- கோடைகால சிறப்பு தொகுப்பு ரூ. 2000/- மொத்தம் 1.31 கோடி இல்லத்தரசி களுக்கு ரூ. 5000/- மகளிர் உரிமைத் தொகையாக வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி உடன்குடி மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் மெஞ்ஞானபுரத்தில் ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மனுமான டிபி. பாலசிங் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் உடன்குடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் சிவராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் விஜயன், ஒன்றிய துணை செயலாளர் விஜயா, மாவட்ட பிரதிநிதி நாகபிரபு, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முகமது நூர் பாய்ஸ், கிளைச் செயலாளர்கள் மடத்துவிளை ஜோசப் ராஜா, சித்திரைப் பாண்டி, சந்தோஷம், செல்வின், ராஜ்குமார், முருகன், சின்னதுரை, முருகன், ஜோசப் பொன்ராஜ், சாமிவேல், தகவல் தொழில் நுட்ப அணி ஜெபராஜ், ராஜபிரதிபன், மதன், ஸ்ரீதர், சண்முக சுந்தரம் அஜய், ராஜேஷ், சத்யா நகர் பட்டு ராஜா, மகளிர் அணிஜெயராணி பாப்பா, ஜெபக்கனி, ஜூலியட், ஜாக்குலின், பிரித்தி, ராஜலெட்சுமி, கிளைச் செயலாளர் கள் சித்திரவேல், ராமச்சந்திரன், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக