திருப்பூர் மாவட்டம்: தாராபுரம் பகுதியில் ஆதரவற்ற, அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை மனிதநேய அடிப்படையில் அடக்கம் செய்து வரும் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இதுவரை 236 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், மூலனூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் கண்டறியப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன், துணை ஆய்வாளர் பாலமுருகன், தலைமை காவலர் ஆனந்த் ஆகியோர் அந்த உடலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களாக யாரும் உரிமை கோராததால், உடல் அறக்கட்டளை சார்பில் தலைமை காவலர் ஆனந்த் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் சையத் அபுதாகீர், செயலாளர் சண்முகம், செயல் தலைவர் முணைவர் கவி சிவசங்கர், துணை தலைவர் அப்பாஸ், துணை செயலாளர் ஜெய்பீம் அழகர், சக்திவேல், அறக்கட்டளை நிர்வாகிகள் ரகு,செல்வம்,தாரை மணி,சமூக சேவகர்கள் ஜாபர் சாதிக், அக்கிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடையாளம் தெரியாத நபரின் உடல் தாராபுரம் பழைய ஆற்று பாலம் அருகில் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த மனிதநேய செயல் சமூக வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக