தாராபுரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: இட்லி மாவு விற்பனையாளர் பலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 பிப்ரவரி, 2026

தாராபுரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: இட்லி மாவு விற்பனையாளர் பலி


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்  சாலை விபத்தில், இட்லி மாவு விற்பனை பிரதிநிதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி புறவழிச்சாலையில், நளினி கல்லூரி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. காங்கேயத்தைச் சேர்ந்த தமிழ் (23) வெள்ளகோயிலை தலைமையிடமாகக் கொண்ட ஆசிர்வாத் இட்லி மாவு நிறுவனத்தின் விநியோக வாகனமான மாருதி அல்டோ காரில் பயணம் செய்து வந்தார்

அதே நேரத்தில், பழனியைச் சேர்ந்த நிதி நிறுவனர் செல்லத்துரையின் மனைவி வனிதா பயணம் செய்த ரெனால்ட் டஸ்டர் கார் எதிரே வந்த அல்டோ காருடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது மோதல்   அல்டோ கார் முற்றிலும் நொறுங்கியதில்  தமிழ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த விபத்தில் ரெனால்ட் டஸ்டர் காரில் இருந்த வனிதா காலில் லேசான காயமடைந்தார். அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நொறுங்கிய காரில் சிக்கியிருந்த தமிழின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இரு காற்களும் அப்பளம் போல் நசுங்கிய நிலையில் காணப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக தாராபுரம் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad