திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவ மனையில் இருசக்கர வாகன திருடிய (65 வயது) முதியவர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 பிப்ரவரி, 2026

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவ மனையில் இருசக்கர வாகன திருடிய (65 வயது) முதியவர் கைது !

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவ மனையில் இருசக்கர வாகன திருடிய 65 வயது முதியவர் கைது !
திருப்பத்தூர் ,பிப்.4- 
      திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியை சேர்ந்த வர் மாதப்பன் (வயது 57). இவர் உடல் நிலை குறைவால் சிகிச்சை பெற திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ள்ளார். அப்போது அவர் ஒட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தை அரசு மருத்துவ மனை வளாகத்தில் நிறுத்திவிட்டு மருத் துவமனைக்கு உள்ளே சென்றுள்ளார். 
சிகிச்சை பெற்ற பின்னர் வெளியே வந்த பார்த்தபோது இருசக்கர வாகனம் இல்லா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரு சக்கர வாகனம் திருடு போனதை அறிந்து சம்பவம் குறித்து நகர காவல் நிலையத் தில் புகார் அளித்தார். 
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோலார் பேட்டை அடுத்த மூக் கனூர் மாயன் வட்டம் பகுதியை சேர்ந்த விஜயன்(வயது 65) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர் ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad