தண்ணீரின் அருமையை அறிந்து கொண்டு, பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும், குறைவாகவும் பயன்படுத்த பழகிக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 பிப்ரவரி, 2026

தண்ணீரின் அருமையை அறிந்து கொண்டு, பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும், குறைவாகவும் பயன்படுத்த பழகிக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.


கிராம மக்கள் அனைவரும் தண்ணீரின் அருமையை அறிந்து கொண்டு, அதனை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும், குறைவாகவும் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பான வேண்டுகோள். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
இன்று (05.02.2026), சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.515.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 363 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், வடவல்லநாடு ஊராட்சிக்குட்பட்ட சேதுராமலிங்கபுரம் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது :-
 
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அமைக்கப்பட்டிருக்கின்ற 363 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்திருக்கிறார்கள். 

அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, வடவல்லநாடு, சேதுராமலிங்கபுரம் கிராமத்தில், இந்த திட்டத்தினுடைய நீர் சுத்திகரிப்பு மற்றும் நீரேற்று நிலையத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க கூடிய அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்த 363 குடியிருப்புகளுக்கான இத்திட்டத்திற்கான ஒப்பந்த மதிப்பீடு என்பது 515.72 கோடி. கிட்டத்தட்ட 516 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 516 கோடி ரூபாய் என்பதை விட, அது எத்தனை மக்களுக்கு பலனளிக்கிறது என்று பார்த்தால், 3 இலட்சத்து 47 ஆயிரம் மக்களுக்கு, தினசரி தாகத்தை தீர்ப்பதற்காக இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கு 3 இலட்சம் பேர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர். 

ஆனால் 2039 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர்களாக மக்கள் தொகை உயரக்கூடும். இது 2054 ஆண்டில் 3 இலட்சத்து 96 ஆயிரமாக உயரக்கூடும் என்ற கணக்கீடுகளையெல்லாம் செய்து, ஒட்டுமொத்தமாக இதுபோன்ற நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கணக்கீடுகளை செய்து, இத்திட்டத்தினை சிறப்புற வடிவமைத்திருக்கிறார்கள். 
இத்திட்டத்தின் தொடக்கம் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றாலும், நான் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த மாவட்டத்தில் பணியேற்ற பொழுது, இத்திட்டம் நிறைவடையும் தருவாயில் இருந்தது. மேலும், ஒவ்வொரு வாரமும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, நகராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள் என ஒவ்வொரு பகுதிகளிலும் குடிநீர் சரியாக வழங்கப்படுகிறதா என காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். 

அதில் முதன்மையான திட்டமாக இந்த திட்டத்தை ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்து கொண்டிருப்போம். அனைவரும் பொறுப்புணர்வுடன் அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார். 
 
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தலைமை பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை, மு.கணேஷ், நிர்வாக பொறியாளர், கிராம குடிநீர் திட்ட கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தூத்துக்குடி இராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் கிராம குடிநீர் திட்ட உபகோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தூத்துக்குடி மகேஷ்குமார், கிராம பொதுமக்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad