வாரியார் நகரில் 90ஸ் கிளப் அரென என்னும் புல் தரை உள் விளையாட்டரங் கம் திறப்பு !
குடியாத்தம் , பிப் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அடுத்த வாரியார் நகரில் '90ஸ் கிளப் அரென ' என்னும் புல் தரை உள்விளை யாட்டு அரங்கம் (8.2.2026) திறக்கப் பட்டது.குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவர் எம். கோபிநாத், கோல்டன் கேலக்சி ரோட்டரி சங்கத் தலைவர் மாணிக்கம்,
குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் சந்திரன், மற்றும் சிவக்குமார், ஜெய சீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டரங்க உரிமையாளர் பிரதீப் அனைவரையும் வரவேற்றார். யசோதா அம்மையார், நந்தினி, ராதா, பிரியா, ஆகியோர் குத்து விளக் கேற்றினர்.
நிகழ்வில் உள் விளையாட்டு அரங்கம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏ. மயில்வாகனம் திறந்து வைத்தார்.
ரோட்டரி மாவட்டம் 3231 மாவட்ட ஆளுநர் வி.சுரேஷ், கே.எம்.ஜி. கல்லூரி செய லாளர் கே. எம்.ஜி. ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் கே. எம். பூபதி, ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜே. கே.என். பழனி, ரோட்டரி வருங்கால ஆளுநர் . T S. ரவிக்குமார், குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் எஸ். சௌந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் என். இ.சத்யானந்தம்
துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் நகர காவல் ஆய்வாளர்.ருக்மாங்கதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு அரங்க உரிமையாளர் அருள் நன்றி கூறினார்.விழாவை ஒட்டி 90 ஸ் கிளப் அரென சார்பாக சாலை பாது காப்பை வலியுறுத்தி 50க்கும் மேற்பட் டோருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களின் அறிவுறுத் தல் படி தலைக்கவசம் வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு வலியுறுத்தி ஊர் வலத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
கிரிக்கெட்,வாலிபால், புட்பால், பேட்மிட் டன், கராத்தே, யோகா போன்ற விளை யாட்டுகளை ஒரே இடத்தில் விளையாடும் வண்ணம் இந்த உள்விளையாட்டு அரங்கம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள் ளது.குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலே முதல்முறையாக இத்தனை விளையாட்டு கொண்ட உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரில் உள்ளது போல உள் விளை யாட்டு அரங்கம் குடியாத்தம் நகரிலே சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. போட்டி கள் நடத்தினால் நூற்றுக்கணக்கான பார்வையாளர் அமர்ந்து ரசிக்கும் வகையிலும் விழாக்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் கொண்ட அரங்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொண்ட புல்வெளி, வெயிலிலும் மழை யிலும் விளையாடும் வண்ணம் மேற் கூரை என்று பல வசதிகள் கொண்ட உள்விளையாட்டராக நிரம்பி உள்ளது.
என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக