காரைக்குடி, பிப்.06:
அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று கல்லூரி நுழைவாயிலில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் அடிப்படை உரிமைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வாய்முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
-
UGC விதிமுறைகளின்படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும்.
-
ஆண்டுதோறும் 12 மாத ஊதியம் வழங்க வேண்டும்.
-
PF மற்றும் EF போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களில் கௌரவ விரிவுரையாளர்களையும் இணைக்க வேண்டும்.
-
மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
-
ஓய்வு பெறும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றக்கூடியவை என்றும், இதுவரை தங்களை “சுரண்டி பிழிந்தது போதும்” என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர். குறுகிய காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், காலவரையற்ற மற்றும் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக