மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.


மேச்சேரி, பிப். 06:


சேலம் மாவட்டம், மேச்சேரி, எம்.காளிப்பட்டியில் அமைந்துள்ள காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் “நவீன நுண்ணுயிரியல் துறையில் உருவாகும் புதுமைகள்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.


கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக தென் கொரியாவின் ஜியொன்புக் தேசிய பல்கலைக்கழகம் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் பேராசிரியர் முனைவர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் பெரியார் பல்கலைக்கழகம் நுண்ணுயிரியல் துறையின் இணைப் பேராசிரியர் அய்யாசாமி முதன்மை அழைப்பாளராக பங்கேற்று கருத்துரை வழங்கினார்.


இப்பன்னாட்டுக் கருத்தரங்கில்,

  • நுண்ணுயிரிகள் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கு வழங்கும் பங்களிப்பு,

  • பல்வேறு தொழில்துறைகளில் நுண்ணுயிர்களின் பயன்பாடுகள் மற்றும் அதன் நன்மைகள்,

  • நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்

என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், தாளாளர் இராமநாதன், துணைத் தலைவர் மதன் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், நிர்வாக அதிகாரி கருப்பண்ணன், புல முதன்மையர் (மாணவர் சேர்க்கை) நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.


நிறைவாக நுண்ணுயிரியல் துறைத் தலைவர் தில்லைநாயகி நன்றி உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ–மாணவியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்புற ஒருங்கிணைத்து நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad