திருநெல்வேலி மாவட்டம் ஓமநல்லூர் கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்ட்றோ (32). இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இரணியல் அருகே உள்ள ஒரு கட்டிட காண்ட்ராக்டரிடம் ஜேசிபி ஓட்டுனராக 4 ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார்.
நுள்ளிவிளை பகுதியில் தங்கி இருந்த ஆண்ட்றோ திங்கள்சந்தையில் இறைச்சி வாங்கி விட்டு பைக்கில் சென்றார். இரணியல் ஆமத்தான்பொத்தை வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோவும் பைக்கும் மோதியது.
தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஆண்ட்றோ பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக