குடியாத்தம் அடுத்த பரதராமிஅருகே நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம் !
குடியாத்தம் , பிப் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் டிபி பாளையம் கிராமத்தில் இன்று 04-02-2026 பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் பரத ராமி கிராமத்திலிருந்து கொத்தூர் கிரா மத்தை நோக்கி மூன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆட்டோ (வாகன எண். TN 23 BU 2239 )மேற்படி கிராமத்தில் அமைந்துள்ள சர்ச் அருகே குறுக்கே எதிர் பாராதவிதமாக வந்த நாய் காரணமாக வாகனத்தை உடனடியாக நிறுத்த முற்பட்டபோது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்து
இதில் ஆட்டோ ஓட்டுநரான டி.பி. பாளை யம் கிராமத்தைச் சேர்ந்த ஈசாக் த.பெ இஸ்ரவேல் (வயது 38) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கார் மூலம் குடியாத்தம் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லும் போது வழியிலேயே உயிரி ழந்துள்ளார். இவரின் மனைவி பெயர்
பிரியங்கா(வயது 33). இவருக்கு லோகப் ரியன்(வயது 12) லோகப்பிரகாஷ் (வயது 12) தேவதர்ஷன் (வயது 8) என மூன்று மகன்கள் உள்ளனர்.
மேலும் இதில் பயணம் செய்த டிபிபாளை யம் கிராமத் தை சேர்ந்த அன்னச் செல்வி க / பெ நாகன் என்பவருக்கு இடது கை யில் அடிப்பட்டுள்ளது. இவர் இந்து ஆதிதிரா விடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. மற்றும் உடன் பயணம் செய்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர் களுக்கு எந்த ஒரு அடியும் இல்லை. மேற்படி இறந்தவரின் பிரதேம் உடற்கூறு ஆய்வுக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது இது சம்பந்தமாக . பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக