குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் பாலின உளவியல் குறித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 பிப்ரவரி, 2026

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் பாலின உளவியல் குறித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் பாலின உளவியல் குறித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
குடியாத்தம் ,பிப் 4 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் இன்று பாலின உளவியல் குறித்து கண்காணி ப்பு மற்றும் விழிப்புணர்வு குழு சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் .ஜெ. எபநேசர் தலைமையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் கல்லூரி முதல்வர் பேசும் போது பாலின உளவியல் குறித்து சிக்கல் வரும் முன்னர் தடுக்க பெற்றோர்கள் வழிகாட்டு தலையும் பேராசிரியர் வழிகாட்டுதலை யும் மற்றும் கல்லூரியில்  இயங்கொண் டிருக்கும் உள் புகார்கள் குழு ஆகியவற் றைப் பற்றி எடுத்துரைத்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக காவல் ஆய் வாளர் ரூக்மாங்கதன். பேசும்போது . மாணவிகள் விழிப்புடன் இருந்து காவல்துறையின் உதவி எண்களை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் காவல்துறையின் செயலியை பயன் படுத்துவதை பற்றியும் எடுத்துரைத்தார். 
உதவி காவல் ஆய்வாளர் தரணி பருவதம் பேசும் பொழுது குழந்தைகள் திருமணம் தடுப்பு மற்றும் போக்ஸோ விழிப்புணர்வு எடுத்துக் கூறினார். இதில் காவலர் பானு மற்றும் கணிதத்துறை தலைவர் முனை வர் செ. கருணாநிதி.இயற்பியல் துறை தலைவர் முனைவர் அ. தாமரை கணிதத் துறை இணை பேராசிரியர் முனைவர்.ந. கெஜலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். 

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad