திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நவீன டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நவீன டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம் !

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நவீன டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம் !
திருவண்ணாமலை , பிப் 6 -

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில்  
தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நவீன டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம் செய்துள்ளது. பயணிகளின் வசதிமற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி டிஜிட்டல் லாக்கர்' வசதியைத் தொடங்கி வைத்துள்ளது. பயணிகள் யாருடைய உதவியும் இன்றி, தாங்களாக வே மிகவும் எளிதாக இந்த லாக்கர் களைப் பயன்படுத்தலாம். பணமில்லா பரிவர்த்தனை  கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதி உள்ளது. 24 மணி நேரமும் CCTV கேமரா கண்காணிப் புடன் கூடியது என்பதால், உடைமைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.சிறிய பை முதல் பெரிய லக்கேஜ் வரை வைப்ப தற்கு ஏற்றவாறு, பல அளவுகளில் லாக் கர்கள் அமைக்கப்பட்டுள்ளன.பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்ல இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் 
-கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad