தூத்துக்குடி மறை மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலையில் சிறப்பு வாய்ந்த இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் முதல் வெள்ளி அருட்தந்தை ஜெரோசின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் அருட்தந்தை அக்னல் அமல்ராஜ் மறையுரை வழங்கினார்.
கொழுந்தட்டு பங்குத்தந்தை பீட்டர் பால் சிறப்பு ஜெப வழிபாடு செய்தார். இதில் ஜீவா நகர் பங்குத்தந்தை இருதயராஜ் பர்ணாந்து மற்றும் அருட்தந்தையர்கள், அருள் சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முடிவில் திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய விருந்து அளித்த பாளையங்கோட்டை சவேரியார் பேராலய ஜெயா செல்லத்துரை குடும்பத்தினருக்கு திருத்தல நிர்வாகம் சார்பில் அருட்தந்தை ஜெரோசின் நினைவு பரிசு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை டைட்டஸ் மற்றும் திருத்தல நிதி குழுவினர் பங்கு இறை மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக