காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரேநாளில் காணாமல் போன இருவர் மீட்பு ரயில்வே போலீசார் நடவடிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 பிப்ரவரி, 2026

காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரேநாளில் காணாமல் போன இருவர் மீட்பு ரயில்வே போலீசார் நடவடிக்கை !

காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரே நாளில் காணாமல் போன இருவர் மீட்பு ரயில்வே போலீசார்  நடவடிக்கை !
காட்பாடி , பிப் 5 -
               வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மேற் கொண்ட தீவிர சோதனையில், கிருஷ்ண கிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காணாமல் போனதாகப் பதிவு செய்யப் பட்ட ஒரு இளைஞர் மற்றும் ஒரு பெண் ணை மீட்டு, அவர்களது குடும்பத்தின ரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.கிருஷ் ணகிரி இளைஞர் மீட்பு திருவண்ணா மலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல் பள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 23),  இவர் காணாமல் போனது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், HUDCO காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு  செய்யப்பட்டிருந்தது. இந்நிலை யில் இன்று காட்பாடி ரயில் நிலையத்தில் சுபாஷை மீட்ட காட்பாடி ரயில்வே போலீ சார், HUDCO காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  மற்றும் சுபாஷின் தாயார் சுகந்தி, மாமா பார்த்திபன் ஆகியோரை வரவழைத்து, உரிய முறையில் ஒப்படைத் தனர். விழுப்புரம் பெண்மணி மீட்பு அதே போல், விழுப்புரம் மாவட்டம், பல்லரி பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தி (வயது 41),  என்பவர் கடந்த 14.09.2024 அன்று காணாமல் போயுள்ளார். இது குறித்து விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
காட்பாடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட இவரை, திருவெண்ணெய்நல்லூர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆனந் தியின் மகன் கார்த்திகேயன், உறவினர் கனகராஜ் ஆகியோரிடம் காட்பாடி ரயில் வே போலீசார் நல்ல முறையில் ஒப்படை த்தனர்.ஒரே நாளில் வெவ்வேறு மாவட்ட ங்களைச் சேர்ந்த இருவரை மீட்டு, அந்தந் தப் பகுதி காவல்துறையினரிடமும், உற வினர்களிடமும் ஒப்படைத்த காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா மற்றும் உதவி ஆய்வாளர் பத்ம ராஜ் மற்றும் குழுவினரின் துரிதமான மற்றும் மனிதாபிமானமிக்க இந்தச் செயலை பயணிகள் மற்றும் பொது மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad