முத்தையாபுரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

முத்தையாபுரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி.

முத்தையாபுரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி 

பிப்.12- தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முள்ளக்காடு ராஜீவ் நகர் 7வது தெருவை சேர்ந்த அந்தோணி மகன் சரண் டேவிட் (25), இவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது திருச்செந்தூர் மெயின் ரோடு ஸ்பிக்நகர் அருகே அளவுக்கு அதிகமாய் மது அருந்திய நிலையில் மெயின் ரோடு நடுச்சுவற்றில் மோதியுள்ளார். 

இதனால் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சரண் டேவிட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad